search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினேஷ் சண்டிமல்"

    காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் தினேஷ் சண்டிமலுக்கு இடம் கிடைக்கவில்லை. #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வருகிற சனிக்கிழமை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இதற்கான இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேச அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தினேஷ் சண்டிமலுக்கு இடம் கிடைக்கவில்லை.

    உள்ளூரில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்பதால் அவர் அணியில் இடம் பெறவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மேத்யூஸ், 2. குசால் பேரேரா, 3. குசால் மெண்டிஸ், 4. உபுல் தரங்கா, 5. தனுஷ்கா குணதிலகா, 6. திசாரா பெரேரா, 7. தசுன் ஷனகா, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. அகிலா தனஞ்ஜெயா, 10. தில்ருவான் பெரேரா, 11. அமிலா அபோன்சோ, 12. கசுன் ரஜிதா, 13. சுரங்கா லக்மல், 14. துஷ்மந்தா சமீரா, 15. லசித் மலிங்கா, 16. நிரோஷன் டிக்வெல்லா.
    இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. #Chandimal
    இலங்கை அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கேப்டன் சண்டிமல் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதனால் மாற்றுப் பந்தை பயன்படுத்த நடுவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, அணி மானேஜர் அசாங்கா குருசிங்கா பீல்டிங் செய்ய மறுத்தனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேர ஆட்ட நேரம் பாதித்தது.



    இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சண்டிமல் அப்பீல் செய்திருந்தார். இந்த அப்பீல் விசாரணை முடிவில் மூன்று பேருக்கும் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சண்டிமல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் விளையாட முடியாது.
    ×